ஐக்கிய
மக்கள் கூட்டமைப்பு எனும் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை
வேட்பாளராக நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும்
எம்.ஏ.எம்.தாஹிர் என்பருக்கு எதிராக வாக்காளர்களை திசை திருப்பும் வகையில்
போலியான குற்றச்சாட்டுக்களை அச்சிட்டு; விநியோகம் செய்தார் என்று பிரதி
சுகாதார அமைச்சர் பைசால் காசிம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில்
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல்
ஆணையாளரிடம் 21.01.2018 இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இது பற்றி
அம்பாரை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடமும், அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ
மாஅதிபரிடமும், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பெர்றுப்பதிகாரியிடமும்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹீர் செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தனது வெற்றி வாய்ப்பை மழுங்கடிக்கச் செய்வதற்காகவே இத்தகைய போலியான குற்றச்சாட்டை பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிமும், ஐக்கிய தேசிய கட்சியில் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் போலியான குற்றச்சாட்டுக்களை மக்களிடம் நூல் வடிவில் பரப்புரை செய்துள்ளார்கள். வாக்காளர்களை திசை திருப்பும் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக விரோத செயலாகும். அத்தோடு தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் இந்நடவடிக்கையாகவும் இது உள்ளது. ஆதலால், இவ்வாறு செயற்படும் பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிமுக்கும், ஐக்கிய தேசிய கட்சியில் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment