• Latest News

    April 29, 2019

    சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தற்காலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில்  உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான,  சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிாியரான இவர் ஹொரவப்பொத்தான- முக்கருவெவ பிரதேசத்தில் வைத்து கைது​செய்யப்பட்டுள்ளாரென ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    ஹொரவப்பொத்தான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் வரகாபொல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருடனும் குறித்த ஆசிரியர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் நெருக்கமான உறவைப் பேணி வருபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஊடாக பணத்தைப் பெற்று வறிய குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கையை குறித்த ஆசிரியர் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் கெப்பிட்டி​கொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top