• Latest News

    May 18, 2019

    முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் 27 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன

     முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் 27 பள்­ளி­வா­சல்­களும் ஒரு அரபுக் கல்­லூ­ரியும் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.
    தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சலின் புள்ளி விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் திரட்­டி­யுள்­ளது.
    குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், ஒரு அர­புக்­கல்­லூ­ரியும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் பல­வற்­றுக்கு பலத்த சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. பல பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. பள்ளிவாயல்களில் சிறு நீர் கழித்தும் அசுத்தப்படுத்தியும் உள்ளன.
    குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள்
    *மஸ்­ஜிதுல் ஹுதா– கொட்­டாம்­பிட்­டிய
    * மஸ்­ஜிதுல் லுஹ்லு– மல்­வத்த வீதி, கொட்­டாம்­பிட்­டிய
    *மஸ்­ஜிதுல் தாருஸ்­ஸலாம்– நிக்­க­பிட்­டிய
    *மஸ்­ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்­கென
    *-மஸ்­ஜிதுல் ஆலியா– பூவெல்ல
    *மஸ்­ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடி­பொல
    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல்– இஹல கினி­யம – வீர­பொக்­குன
    *அப்ரார் தக்­கியா –இஹல கினி­யம
    *ஆயிஷா தக்­கியா– இஹல கினி­யம
    *மஸ்­ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்­பாவ
    *மஸ்­ஜிதுல் அக்ஸா தக்­கியா– கரன்­தி­பொல
    *ஹம்­மா­லியா தக்­கி­யா–­பொன்­கொல்ல –பண்­டார கொஸ்­வத்த
    *பிர்ருல் வாலிதைன் தக்­கியா– செம்­பேவ சுனந்­த­புர
    *மஸ்­ஜிதுல் இஸ்லாம் –வீதி­ய­வெல –நாகொல்­லா­கொட
    *ஜமா­லியா அரபுக் கல்­லூரி– கொட்­டம்­பிட்­டிய
    *தோர­கொட்­டுவ ஜும்ஆ பள்­ளி­வாசல்– கொன்­னாவ– தோர­கொட்­டுவ
    *சுவைக் தக்­கியா– கொன்­னாவ
    *தக்­கியா – பென்­னலி கட­வெர –மொர­கோன்ன
    *கைராத் ஜும்ஆ பள்­ளி­வாசல்– யாய­வத்த –கிரிந்­த­வெவ
    *ஹசனாத் தக்­கியா –கல­பிட்­டி­ய­கம– நிக்­க­வ­ரட்­டிய
    *நிக்­க­வ­ரட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் –நிக்­க­வ­ரட்­டிய
    *பென­டிக்­வத்த தக்­கியா– எஹத்­த­முல்ல– நாகொல்­லா­கொட
    *மாபா­கம தக்­கியா –பரம்­பொல– ஹல்­மில்­லா­வெவ
    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் –அச­ன­கொட்­டுவ –குறத்­தி­ஹேன
    புத்­தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்
    *மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்
    *நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்
    *மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்
    கம்பஹா மாவட்டம்
    *மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் 27 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top