நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே பெரும்பான்மையின காடையர்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை தாக்கி அழித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.
ஊரடங்கு சட்டத்தினால் வீடுகளுக்குள் முஸ்லிம்கள் முடங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் காடையர்களை பாதுகாப்பு தரப்பினர் அடித்துத் துரத்தி கட்டுப்படுத்திய போதிலும், அவர்களின் அடாவடித் தாக்குதல்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பு தரப்பினருக்கு முன்னிலையிலேயே தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடிய பொருட்களுடன் நடமாடிக் கொண்டிருந்ததனையும் அவதானிக்க முடுடிகின்றது.
பாதுகாப்பு தரப்பினர் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களின் வீடுகளுக்கு பெரும்பான்மையினத்து இனவாதிகள் கற்களை வீசி வீடுகளை தாக்கியதாகவும் தொிவிக்கப்படுகின்றன.
முஸ்லிம்களின் வீடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களின் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தற்போது நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்கள் அச்சமடைந்தவர்களாவே இருக்கின்றார்கள். பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

0 comments:
Post a Comment