• Latest News

    May 06, 2019

    படையினரின் சுற்றிவளைப்பு சோதனைகளை ஊடகங்களில் வெளியிட கட்டுப்பாடு - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

    இராணுவம் மற்றும் பொலிஸாாினால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களில் காட்சிப்படுத்தவேண்டாம் என ஜனாதிபதி செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடா்பான ஜனாதிபதி ஊடக பிாிவினால் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
    உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின்
    கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன், வீடுகள், பொது இடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது
    பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்பான காட்சிகள் ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்தப்படுவதனால் சிலவேளைகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எதுவித தொடர்புகளும் அற்றவர்கள் கூட அதில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் நிலை ஏற்படுவதனால்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: படையினரின் சுற்றிவளைப்பு சோதனைகளை ஊடகங்களில் வெளியிட கட்டுப்பாடு - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top