இலங்கையில் அதிக வயது கொண்ட மூதாட்டி மொனராகலை மாவட்டத்தின் சியம்பலான்டுவ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். 1912ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 4ஆம் திகதி மஹராவ பிரதேசத்தில் பிறந்த 108
வயதுடைய சுது ஹாமி என்ற 8 பிள்ளைகளின் தாயாராவர். தற்போதுஅவருக்கு 250 பேர
மற்றும் பூட்டப் பிள்ளைகள் உள்ளதாக அவரது பேத்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் விவசாயம் செய்து, சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களாகும். சுது
ஹாமி தற்போது மூன்றாவது மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரது மூன்றாவது
மகளுக்கு தற்போது 67 வயதாகின்றது.என்னைப் போன்று புண்ணியம் செய்தவர்கள்
இந்த உலகில் இருக்க மாட்டார்கள். 11 முறை சிவனொளிபாத மலைக்கு சென்று
வந்துள்ளேன். அந்த காலங்களில் தென்னை மரத்தில் ஏறி ஒரே நேரத்தில் 16
தேங்காய்களை பறிப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர், தற்போது 18ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்ட வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றார். எனினும் அதிக
மண் சரிவு ஏற்படும் இடத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். உறங்கும்
அறையில் மண் மேடு தொடர்ந்து சரிந்து விழுவதாக தெரிவிக்கப்படுகிறது. தாங்கள்
வாழ சிறிய வீடு ஒன்றை அமைக்க உதவினால், புண்ணியமான இருக்குமென 108 வயதான
மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment