தெற்காசியாவின் ஆச்சரியமாக கருதப்படும் கொழும்பு தாமரை கோபுரம் நேற்றைய
தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
அதிதொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் உட்பகுதி பிரமாண்டான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இக் கட்டுமானப் பணி தொடர்பா காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த
கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான வானிலையில் கட்டுநாயக்க
விமான நிலையம், சிவனொளிபாத மலை ஆகியவற்றை பார்க்கலாம் என தொலைத்தொடர்பு
ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment