எஸ்.றிபான் -
ஜனாதிபதித் தேர்தல் என்றுமில்லாதவாறு அதிக முக்கியத்துவமுடையதாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் பல முனைப் போட்டியாக அமைய இருக்கின்றது. இதனால், அரசியல் யாப்பின் விதிக்கு அமைவாக தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளில் 51 வீதமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரினாலும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையே ஏற்படும் என்று அனுமானிக்கப்படுகின்றது. இதனால், இரண்டாவது விருப்பு வாக்குத்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் இத்தகையதொரு நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் சூழலில் ஜனாதிபதித் தேர்தலை பெரும் பேரம் பேசும் ஒன்றாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முனைந்து கொண்டிருக்கின்றது. அதற்காக வேட்பாளர்களுடன் தனியாக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தீர்வினை எழுத்து மூலமாகத் தருகின்றவர்களுக்கே தங்களின் ஆதரவு வழங்கப்படுமென்று அக்கட்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை யார் வெற்றி பெறுகின்றார் என்பதனை விடவும் தங்களின் பிரச்சினைகள் உண்மை என்ற அங்கிகாரத்தைப் இன்னுமொரு தடவை பெற்றுக் கொள்வதற்கு நினைக்கின்றார்கள். சிறுபான்மையினரின் வாக்குகளில் சுமார் 70 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரே வெற்றி பெறுவார். இதனால், கோத்தபாய, சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் சிறு;பான்மையினரின் நலன்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். புதிய அரசியல் யாப்புக் குறித்துப் பேசுகின்றார்கள். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் தருவோம் என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். என்ற போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எழுத்து மூல உறுதிமொழியையே விரும்புகின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்பதற்காக தமது கோரிக்கைகளை மறைத்து வைக்க முடியாது. எழுத்து மூலமாக பெற்றுக் கொள்ளாதிருக்க முடியாதென்ற முடிவோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்கள் இருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு சிங்கள மக்களும் வாக்களிக்க வேண்டுமென்தற்காக எழுத்து மூல உடன்படிக்கைகளை செய்து கொள்ளவில்லை. தேர்தல் முடிந்ததும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்கள் என்று நம்பினார்கள். குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிகம் நம்பினார்கள். ஆனால், ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தல் முடிந்ததன் பின்னரும் தீர்வுகளைக் கொடுக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியது. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறவில்லை. புதிய அரசியலமைப்புக்குரிய நகல் திட்டத்தை முன் வைத்த போதிலும் புதிய அரசியல் யாப்பை முன் வைப்பதில் விருப்பமின்றி புதிய அரசியல் யாப்பை உருவாக்குவோம் என்று சொல்லிக் கொண்டே வந்துள்ளார்கள்.
இதனால்தான், ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே வேளை, முஸ்லிம் தரப்பினரை எடுத்துக் கொண்டால் அவர்கள் வெற்றி பெறும் வேட்பாளரைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறக் கூடியதொரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்று எண்ணுகின்றார்கள். அந்த வேட்பாளர் தோல்வியடையும் ஒரு வேட்பாளராக கருதப்படுமாயின் முஸ்லிம் கட்சிகள் தங்களது ஆதரவை மாற்று பிரதான கட்சியின் வேட்பாளருக்கு வழங்குவதற்கும் தயராக இருக்கின்றன. இதன் மூலமாக முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை விடவும் வெற்றி பெறக் கூடியவருக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றது. முஸ்லிம் கட்சிகளின் இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எண்ணத்திற்கும், முஸ்லிம் கட்சிகளின் எண்ணத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
பொதுவாக இன்றைய முஸ்லிம் கட்சிகள் சமூகம் சார்ந்த உடன்படிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுடன் செய்து கொண்டதேயில்லை. கட்சித் தலைவர்களின் வெற்றி, அமைச்சர் பதவிகள் போன்றவற்றிலேயே கவனம் செலுத்திக் கொண்டார்கள். இவர்களின் இத்தகைய எண்ணப்பாங்கு காரணமாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தினர்; தாம் தோல்வியடைந்து அடிவாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதனை அடிக்கடி மறந்து போகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தினரின் இந்நிலையை கோமாளிக்கு சமம் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னிலையைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோமாளிகளாகவே இருப்பார்கள்.
ஆனால், தற்போதையே சூழலில் முஸ்லிம் சமூகத்தின் நிலை படுமோசமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையில் முஸ்லிம் சமூகத்தை கோமாளிகள் என்று கருதி தங்களின் விருப்பத்திற்கேற்ப வழி நடத்தலாமென்று முஸ்லிம் கட்சிக்காரார்கள் நினைப்பார்களாயின் அவர்களை நாகரிகக் கோமாளிகள் என்றுதான் கூறுதல் பொருத்தம்.
முஸ்லிம்கள் எல்லா அரசாங்கத்தின் காலங்களிலும் புறக்கணிப்பட்டுள்ளர்கள். அவ்வாட்சிக் காலங்களில் இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளார்கள். உயிர்களை இழந்துள்ளார்கள். சொத்துக்களை பறிகொடுத்துள்ளார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆதலால், முஸ்லிம் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் பதவிகளுக்கு இருந்த உத்தரவாதம் சமூகத்தின் பாதுகாப்புக்கு இருக்கவில்லை. இதே வேளை, முஸ்லிம் கட்சிகளினதும், ஏனைய கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தின் தேவைகள், பிரச்சினைகள், உரிமைகள் விடயங்களில் ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், அதனை வெட்கத்தினால் சொல்லவில்லை. மூடிமறைத்து நாகரிகக் கோமாளிகள் போன்று கோட்டும், சூட்டும் அணிந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பாழாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு மொட்டுக் கட்சியின் வேட்பாளருக்கு அல்லது யானைக் கட்சியின் வேட்பாளருக்கே இருக்கின்றது. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இருக்கப் போகின்றன. மஹிந்தவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அடிவிழுந்தது என்ற காரணத்திற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால், நடந்தவை யாவும் தலை கீழாகவே இருந்தன. மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமைகளில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். மஹிந்தவின் அரசாங்கம் பருவாயில்லை என்று சொல்லும் வண்ணம் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். பள்ளிவாசல்க்ள தாக்கப்பட்டன. உயிர் மற்றும் சொத்து இழப்புக்கள் ஏற்பட்டன.
எல்லா ஆட்சிகளின் போதும் பௌத்த இனவாதிகளே ஆட்சியாளர்களை வழிப்படுத்திக் கொண்டார்கள். இதனால்தான் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். பௌத்த இனவாதிகளை ஆட்சியாளர்களே பாதுகாத்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார்கள். இதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு அழுத்தங்களை கொடுக்காது, அடங்கி இருந்தார்கள். ஆனால், பொது மேடைகளிலும், ஊடக அறிக்கைகளிலும் சமூகம், உரிமை என்று பேசிக் கொள்கிறார்கள். இத்தகையவர்களை நாகரிக கோமாளிகள் என்றழைப்பதே பொருத்தமாகும். அதனை மேலும், நிருபிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் சமூகம் விவகாரங்களை பற்றி பேசாது வெற்றி பெறும் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். வெற்றி பெறும் வேட்பாளருக்காக எதனையும் விட்டுக் கொடுப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தலை பொறுத்த வரை முஸ்லிம்களின் தலைவிதியை மாற்றுகின்றதொரு தேர்தலாக இருக்குமென்று முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் தலைவிதியை முறையாக கட்டமைக்க வேண்டுமாயின் சமூகம் பற்றிதொரு திட்டமிடல் இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றது. அவற்றை தீர்ப்பதற்கு எந்தவொரு திட்டமும் இல்லாதவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஏனைய தலைமைகளும் உள்ளன. இவ்வாறு வெறும் கைகளுடன் இருந்து கொண்டு ஜனாதிபதித் தேர்தல் முஸ்லிம்களின் தலைவிதியை மாற்றுகின்றதொரு தேர்தல் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் விரல் நீட்டுகின்ற ஒரு வேட்பாளருக்கே முஸ்லிம் சமூகம் வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்கே முடிவு செய்துள்ளன. ஆனால், வெற்றி பெறும் வேட்பாளராக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றது. தேர்தலை பொறுத்த வரை வெற்றி என்பது முக்கியம்தான். அதற்காக சமூகத்தின் பிரச்சினை பற்றி பேசாதிருக்க முடியாது. அதற்கான தீர்வுகளை கோராதிருக்க முடியாது. தேசிய காங்கிரஸ் பொதுப் பெரமுனவின் வேட்பாளரை ஆதரிப்பதற்;கு தீர்மானித்துள்ளது. முஸ்லிம் கட்சிகளிடையே ஜனாதிபதி தேர்தல் பற்றிய முடிவுகள் இவ்வாறு இருக்க போதிலும் இன்னும் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை.
ஆயினும், ஐக்கிய தேசிய கட்சி, பொதுப் பெரமுன ஆகியவற்றில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் இப்போதே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தினர் இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மறக்கக் கூடியவர்கள், எதிர் காலத்தைப் பற்றி நினைக்காதவர்கள் என்று கணித்து வாயில் வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் ஆயதக் குழுக்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டகாசங்களைச் செய்த போது, வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அச்சத்திலே காலத்தை கழித்தார்கள். அதனை விடவும் மோசமானதொரு பயத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் உள்ளார்கள். ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. எந்த வேளையில் நம்மை தாக்குவார்களோ என்ற பீதியுடன் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும். என்றாலும், இலங்கையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதில் ஆட்சியாளர்கள் தவறியுள்ளார்கள். முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் இராஜமரியாதையுடன் இருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளின் அடாவடியிலிருந்து பாதுகாப்பு பெறவும், தங்களின் வாழ்விடங்களில் குடியிருக்கவும், தொழில் செய்யவும், சுதந்திரமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவும், தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ளவுமே மஹிந்தராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். அவர் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தார். முஸ்லிம்களும் தாங்கள் நினைத்தது நிறைவேறி விட்டது என்று சந்தோசம் கொண்டார்கள். ஆனால், தங்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளும், புத்தரின் தர்ம போதனைக்கு மாற்றமாக செயற்படும் இனவாத தேரர்களும் செயற்படுவார்கள். தங்களின் சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்துவார்கள். தாக்குதல்களை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு அரசாங்கம் அணுசரனை வழங்குமென்று முஸ்லிம்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியில்தான் பௌத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டன. பொதுபல சேனவின் காரியாலயத்தை அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாயராஜபக்ஷவே திறந்து வைத்தார். இதன் மூலமாக அன்றைய ஆட்சியாளர்களின் கொள்கையை புரிந்து கொள்ள முடியும்.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று முடிவு செய்து, தாம் சார்ந்த அரசியல் கட்சிகள் முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாகவே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். தற்போது மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்களித்த தரப்பினருக்குத்தான் மீண்டும் வாக்களிப்பதற்குரிய சூழலை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதற்காக அவர்களை போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், போற்றிப் புகழும் வகையில் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளவில்லை. இதனால், முஸ்லிம்கள் மூன்றாவது சக்திக்கு வாக்களிப்பதா அல்லது முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதா என்று முடிவு செய்து கொள்ள வேண்டியுள்ளது. இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவருக்கே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு முஸ்லிம் சமூகம் இருக்கின்ற நிலையில் இந்த நாட்டினதும், முஸ்லிம்களினதும் பாதுகாப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய ஆட்சியில்தான் முஸ்லிம்களின் மீது அதிக தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்தைப் பற்றிய எந்தவொரு திட்டமும் ஐக்கிய தேசிய கட்சியிடம் இல்லை.
முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டை இல்லாமல் செய்யும் ஆளுமை கோத்தபாயவிடம் மட்டுமே இருக்கின்றதென்று மொட்டுக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்பதற்காக பொய்களை தேசிய கட்சிகளில் உள்ளவர்கள் தெரிவித்துக் கொண்டிருப்தற்கு பிரதான காரணம் அவர்களிடையே சமூகத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதிருப்பதேயாகும்.
சமூகத்தைப் பற்றிச் சிந்திக்காதவர்கள், சமூகத்தின் முதுகின் மீது ஏறி சவாரி செய்ய தயங்கமாட்டார்கள். தான் வீழ்ந்தாலும் சமூகம் வாழ வேண்டும். அதுவே அடுத்த சந்ததியினருக்கு பாதுகாப்பு என்று சிந்திப்பதற்கு பதிலாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை எப்படி பெற்றுக் கொடுக்கலாமென்று தமது வியாபாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். வியாபாரி இலாபத்தை அடைவதனையே விரும்புவான். ஒரு சமூகவாதி தனது சமூகம் வாழ வேண்டுமென்றுதான் விரும்புவான். அதற்காக தம்மையும் இழப்பதற்கு தயங்கமாட்டான். இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் (உட்பட) எல்லோரும் வியாபாரிகளாகவே இருக்கின்றார்கள். அவர்கள் தங்களது வியாபாரத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு நாகரிக கோமாளிகள் போன்று உரிமைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

விடிவெள்ளி 13.9.2019
0 comments:
Post a Comment