அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் உள்ளூராட்சி சபை
பிரதிநிதிகளின் மாநாட்டில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது
தொடர்பான யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை பிரதேச சபை தலைவர்
கரு வீரரத்தன முன்மொழிந்ததுடன், சேவில பிரதேச சபையின் தலைவர் ஏ.ஜே. ரணசிங்க
வழிமொழிந்து்ளளார்.
கொழும்பு சுகததாச உள்ள அரங்கில் இன்று நடைபெற்ற
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளின்
மாநாட்டில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநாட்டில் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
0 comments:
Post a Comment