எதிர்கால சந்ததிக்காக தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பது மக்களின் கடமை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இன்று நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏகமனதாக வேட்பாளரை அறிவிக்க இன்னும்
முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும்
பொதுஜன பெரமுனவினால் அவரை தோற்கடிக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளரை தெரிவு செய்ய முடியாமல் நேற்று வரை இழுபறி நிலை நீடித்தது.
தான்
போட்டியிட போவதாக ரணில் நேற்று கூறியுள்ளார். எனினும் தான் போட்டியிட
போவதில்லை என மற்றவர் இன்னும் கூறவில்லை. தனக்கு ஓரளவுக்கு முதுகெலும்பு
இருக்கின்றது என்பதை ரணில் காட்டியுள்ளார்.
அவர் கூறியதை செய்வாரா,
அல்லது அனைவரையும் காட்டிக்கொடுத்து விட்டு வேறு யாருடைய மடியில் புகுந்து
கொள்வாரா என்பது தெரியாது. ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக
போட்டியிடுவார்கள் எனக்கூறப்படும் மூன்று பேரும் போட்டியிட்டலும் தனித்து
போட்டியிட்டாலும் எம்மால் அவர்களை தோற்கடிக்க முடியும்.அத்துடன் வேறு ஒரு நாட்டின் அடிமையாக இருக்க இலங்கைக்கோ, நாட்டு மக்களுக்கோ
எந்த தேவையும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment