நேற்றையதினம் (27) தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள காபூலின் தென்மேல்
பகுதியிலுள்ள, கிழக்கு ஆப்கானின் கஸ்னி மாகாணத்தில் வீழ்ந்து எரிந்த
விமானம் அமெரிக்க இராணுவத்திற்குரியது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆயினும் தாங்கள் குறித்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, தலிபான் தெரிவித்துள்ளது.
புலனாய்வு பணியில் ஈடுபட்ட குறித்த விமானத்தை கஸ்னி மாகாணத்தின், தெஹ்
யாக் மாவட்டத்திலுள்ள (Deh Yak) சாடோ கெல் (Sado Khel) எனும் பகுதியில்
வைத்து தமது படையினர் சுட்டு வீழ்த்தியதாக, தலிபானின் பேச்சாளர்
ஷபிஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.இதில் உயர் பதவியிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் இது எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தாம் நம்பவில்லை
எனவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அமெரிக்க இராணுவ
கட்டளைத் தளபதி கேணல் சோனி லெக்கெட் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பலியானோர் தொடர்பில் தகவல்கள் எதுவும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 18 வருடமாக
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் போதை நிறைவுக்கு கொண்டு வருவது தொடர்பில்
பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2001 இல் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, பலம்
பொருந்திய தீவிரவாத அமைப்பாகக் காணப்பட்ட தலிபான் மீது அமெரிக்கா
தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இரு தரப்புக்கும் இடையில் கட்டாரின் தலைநகர் டோஹாவில்
சமரசம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், செப்டெம்பர் மற்றும் டிசம்பரில்
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக இரு
தடைவைகள் அது சாத்தியமற்றதாக மாறியது.
இது தொடர்பில் கடந்த வாரம் அமெரிக்க விசேட பிரதிநிதி மற்றும் தலிபானின்
பிரதான பேச்சுவார்த்தையாளரான முல்லாஹ் அப்துல் கானி ஆகியோருக்கிடையிலான
மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தையும் ஆரம்பமாகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment