நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஊரடங்கு சட்டத்தையும் மீறி
செயற்பட்டமைக்காக பல மதுபான சாலைகள் சட்டரீதியாக ( சீல் வைத்து)
மூடப்பட்டுள்ளன.
மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில் குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஊரடங்கின் போது
தமது இருப்புக்களில் இருந்த மதுபானசாலைகளில் இருந்து மதுபானங்களை
விநியோகம் செய்தமை மற்றும் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த மதுபானசாலைகள் சட்டரீதியாக
மூடப்பட்டன.
இதேவேளை நாளாந்தம் மதுபானசாலைகள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக மது வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment