திருகோணமலை - மொரவெவ 04ம் வாய்க்கால் பகுதியில் 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் மகன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில்
சிவராஜசிங்கம் சந்திரகுமார் (44 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதுடன்,
உயிரிழந்தவரின் சின்னம்மாவான சுப்ரமணியம் சிவனேஸ்வரி (59 வயது) மற்றும்
சின்னம்மாவின் மகன் சுப்ரமணியம் ரமேஷ் (38 வயது) ஆகியோரே கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சிவராஜசிங்கம் சந்திரகுமார் மதுபோதையில் நேற்றைய
தினம் வீட்டுக்கு வந்து தன்னை திட்டியதாகவும், இதனால் கோபமடைந்த தனது மகன்
தடியால் அவரை தாக்கிய நிலையில் கீழே விழுந்த குறித்த நபரை மண்வெட்டி
தடியால் தாக்கியதாகவும் கைது செய்யப்பட்ட சுப்ரமணியம் சிவனேஸ்வரி பொலிஸ்
வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற
இடத்திற்கு திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர
நதீர வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மொரவெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment