ஆனால், மன்னிப்பு கேட்பதால் நடந்த அனைத்தையும் திருப்புப் பெற முடியுமா? என்ற கேள்விகள் எழுந்தன. மன்னிப்பு கேட்பதால் 20 ஆவது திருத்தம் இல்லையென்றாகி விடுமா? எனவும் வினவப்பட்டது. ஒரு வரலாற்று தவறை மன்னிப்பை கொண்டு நிவர்த்திக்க முடியாது. இது காலா காலத்திற்கும் பழியாகவே இருக்கும் எனவும் பிஷ்தாபிக்கப்பட்டது.
என்னுடைய கருத்துக்களாக;
“நீங்கள் 20யை ஆதரிப்பதற்கு ஆளுக்கொரு நியாயங்களை கூறுகிறீர்கள். இவற்றைப் போன்று ஏராளமான பிரச்சினைகள் இலங்கை பூராகவும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகிறார்கள். கல்முனை பிரச்சினை போன்றுதான் -
இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் பெரும் சிங்கள குடியேற்றமே நடக்கிறது.
தீகவாப்பியை அட்டாளைச்சேனையிலிருந்து துண்டாடி - தனியான பிரதேச சபையாக உருவாக்க - பெருமெடுப்பிலான முயற்சிகளும் நிர்மானங்களும் நடக்கின்றன.
பொத்துவில் பிரதேச முகுது மகா விகாரை காணி அபகரிப்பு கண்ணுக்கு தெரியாமல் கச்சிதமாக நடந்து வருகிறது.
சிங்கள பிரதேசத்தில் காடுகளை அழித்து விவசாயம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களின் விவசாயக்காணிகள் - காடுகள் என விவசாயம் செய்வது தடுக்கப்படுகிறது.
இவை எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
இவை போன்ற அரச பின்புலத்தில் நடக்கும் பாரிய ஆக்கிரமிப்புக்களைப் பற்றி அக்கறை இல்லையா?
கல்முனை விவகாரத்தில் தமிழர் தரப்பை குறைகாணும் நாம் - இவ்வாறு பாரிய ஆக்கிரமிப்பை செய்யும் அரச தரப்பில் நியாயம் காண்கிறோமா?
தமிழர்கள் செய்தால் ஹராம்; சிங்களவர்கள் செய்தால் ஹலாலா?”
“ வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டும் என்று அன்று கூறினோம். ஏன்எனில் தமிழர் மேலாதிக்கத்தின் கீழ் இருக்க முடியாது என்பதற்காக. ஆனால், கிழக்கை வடக்கிலிருந்து பிரித்து - இன்று சிங்கள ஆக்கிரமிப்பிற்கு இரையாக்கி இருப்பதை பேசாமல் மறைக்கிறோமா?”
“ ஒரே வகையான விவகாரங்களில் ஏன் இந்த இரட்டை அனுகுமுறை?
முஸ்லிம்களின் விவகாரங்களில் யார் மூக்குநுழைத்தாலும் பதில் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?
இங்கு மாற்றமேன்?”
“கடந்தகாலத்தில் - 18 ஆவது திருத்திற்கு வாக்களித்ததினூடாக இலங்கையின் ஜனநாயகம் கேள்விக்குறியானது. அதனால் கட்சியின் மீதான நம்பிக்கை முற்றுமுழுதாக சிதைந்தது. பின்னர் அவ்வாறு வாக்களித்தது கட்சியை காப்பாற்ற என்று கூறினோம். “கண்ணை திறந்துகொண்டே குழிக்குள் வீழ்ந்தோம்” என்று கூறினோம். அதனை மக்கள் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டனர். இருந்தாலும் கட்சியின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நம்மால் முற்றாகத்துடைக்க முடியவில்லை.
அதனை நன்கு உணர்ந்திருந்துமா 20 க்கும் ஆதரவு வழங்கினார்கள்?...
அதேபோன்று, அன்று 18 ஆவது திருத்தத்துக்கு வாக்களிக்கும் நிர்பந்தத்தை உருவாக்கியதாக கூறப்பட்ட சகோ.பசீர் சேகுதாவூத் அவர்களை - 18 ஆவது திருத்தத்துக்கு பின்னர் அரசாங்கம் எவ்வாறு கையாண்டது? அதனால்
கட்சியும் சமூகமும் எதிர்நோக்கிய பின்னடைவை மறந்து விட்டமோ? அப்படி இனியும் அரசாங்கம் கையாண்டால் நிலைமை என்னவாகும்? இந்த அரசாங்கத்தை அவ்வளவு நம்புகிறோமா?”
எனக்கேட்டு.....
(தொடரும்)
0 comments:
Post a Comment