20 ஆவது திருத்த நிறைவேற்றத்திற்காக அரசுக்கு ஆதரவளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களிடம் பொதுமன்னிப்பை கோரவேண்டுமென அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை கட்சியின் எம் பிக்கள் நிராகரித்திருப்பதாக அறியமுடிந்தது.
கடந்த சனிக்கிழமை கட்சியின் உயர்பீட கூட்டம் கொழும்பில் நடந்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்டஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ,இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவளித்த தவறை உணர்ந்த தனது கட்சி எம் பிக்கள் கட்சியின் உயர்பீடத்திலும் ,மக்களிடமும் மன்னிப்பை கேட்கவேண்டுமென தெரிவித்திருந்தார்.
ஆனால் கட்சித்தலைவரின் இந்த கோரிக்கையை அரசுக்கு ஆதரவளித்த மு.கா எம் பிக்கள் நிராகரித்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.
” இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடந்தபோது அவரவர் தீர்மானப்படி வாக்களிக்கலாமென கட்சியின் தலைவர் தெரிவித்தார் .அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம்.20 ஆவது திருத்தம் நிறைவேறிய இறுதி நாளன்று ,கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது எம் பிக்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட்டு செயற்பட கட்சித்தலைவர் அனுமதியளித்துள்ளதால் அதன்படியே செயற்படுவதாக குறிப்பிட்டார்.இது ஹன்ஸார்ட்டிலும் பதிவாகியுள்ளது.அது தொடர்பில் கட்சித்தலைவர் நாடாளுமன்றில் மறுக்கவில்லை.அப்படியிருக்கையில் எங்களை மன்னிப்பு கோரச் சொல்வதில் நியாயமில்லை.அப்படியென்றால் கட்சித் தலைவர்முதல் எல்லோரும் சேர்ந்து மன்னிப்புக் கேட்கவேண்டும்.மக்களின் பிரச்சினைகள் தீர அரசுக்கு ஆதரவளிப்போமென எல்லோரும் தீர்மானித்துவிட்டு இப்போது தனியே எம் பிக்கள் மீது பழி போடுவதில் அர்த்தமில்லை. ”
என்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் எம் பி நாடாளுமன்றத்தில் அப்போது குறிப்பிட்ட விடயத்தின் ஹன்சார்ட் பிரதியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Thanks : Thamilan
0 comments:
Post a Comment