பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் மரியாதை தரவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட்டினால் மரணமானவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என்று அண்மையில் பிரதமர் அளித்த அறிக்கையை ஒப்புக் கொள்ளாததன் மூலம் அவரை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது.பிரதமரை அவமதிப்பதற்கும் அவரது அறிக்கையை புறக்கணிப்பதற்கும் அரசாங்கத்திற்குள் ஒரு சிறிய குழு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தெளிவாக அவமதித்துள்ளனர் என்று ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இப்போது பொதுமக்களுக்கு நகைச்சுவையாகிவிட்டது. எனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தேசத்தின் நன்மைக்கு வழிவகுக்காது என்றும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுரவூப் ஹக்கீம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment