நேற்று (20/02) சக்தி டீவியின் நிவ்ஸ் லைன் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்; “பொத்துவில் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர். அவர் இன்றும் கட்சியில்தான் இருக்கிறார். என்னோடு இன்றும் தொடர்பில்தான் உள்ளார். பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சி முஸ்லிம் காங்கிரஸ் வசம்தான் இப்போதும் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மேற்படி கருத்தை நான் வன்மையாக மறுக்கிறேன். நான் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் முழுமையாக விலகி கௌரவ தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் மூலமாக இணைந்து கொண்டுதான் தற்போது இந்த தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஏலவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நான் இருந்த போது கட்சித் தலைமையாலும் கட்சியின் முன்னாள் தவிசாளர் உள்ளிட்டோர்களாலும் நிறையவே ஏமற்றப்பட்டும் துரோகத்தனங்களால் பலமுறை தோற்கடிக்கப்பட்டுமுள்ளேன். தவிசாளர் பதவி தருவதாக எனக்கு வாக்குறுதியளித்து நாணயம் சுண்டி ரவூப் ஹக்கீம் அவர்களால் ஏமாற்றப்பட்டவன் நான். 2 வருடங்களால் எனக்கு தவிசாளர் பதவி தருவதாக சொல்லி ஈற்றில் கட்சித்தலைமையால் கைகழுவப்பட்டவன் நான். பதவி என்பதை தாண்டி குர்ஆன், ஹதீஸை யாப்பாக கொண்ட கட்சி என்று நொடிக்கு நூறு தடவை மார்புமட்டும் கட்சி, அமானிதங்களை நிறைவேற்ற தெரியாத தலைமையை கொண்டிருப்பது நகைப்பானது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நான் பயணித்த பின்னணி இவ்வாறிருக்க எந்த கூச்சமும் இன்றி, மனசாட்சியின்றி ரவூப் ஹக்கீம் அவர்கள் இப்படி பொதுவெளியில் கருத்து தெரிவித்திருப்பதானது மடமைத்தனமானதாகும். அவரின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நான் எனது அரசியல் பயணத்தை இனிமேல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு தொடர்ந்து, தலைவர் ரிஷாட் பதியுதீனோடும், எமது பராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களோடும் இணைந்து பொத்துவில் மண்ணுக்காகவும் கட்சிக்காகவும் தொண்டாற்றவுள்ளேன் என்பதை மீண்டுமொருமுறை உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
0 comments:
Post a Comment