• Latest News

    August 16, 2021

    நேற்று கொரோனா மரணம் 167

    நாட்டில் நேற்று மேலும் 167 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,263 ஆக உயர்வடைந்துள்ளது.

    இதேவேளை, இன்று (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

    குறித்த உத்தரவு இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நேற்று கொரோனா மரணம் 167 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top