• Latest News

    September 11, 2021

    அஜித் நிவாட் கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்பதற்கு பொதுஜன பெரமுன ஆலோசனை

    மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் இன்னும் இரண்டு தினங்களில் தமது பதவியிலிருந்து விலக உள்ளார்.

    மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் மீள நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பதவிக்கான அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியலின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளது.

    பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வாய்ப்பளித்து, ஜெயந்த கெட்டகொட தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஜித் நிவாட் கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்பதற்கு பொதுஜன பெரமுன ஆலோசனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top