• Latest News

    May 27, 2023

    மூலிகைத் தோட்டச் செய்கைக்கு விண்ணப்பம் செய்யலாம்!

    கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழுள்ள மூலிகைத் தோட்டங்களில் மூலிகைத் தாவரங்களை நாட்டி, சரியான முறையில் பராமரித்து அதன் பயன்பாட்டுப் பொருட்களை வழங்கக்கூடியவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

     

    அதற்கமைவாக, திருகோணமலை கப்பல்துறையில் 4 ஏக்கர் கொண்ட மூலிகைத் தோட்டத்திலும், மட்டக்களப்பு வாகரையில் 1½ ஏக்கர் கொண்ட மூலிகைத் தோட்டத்திலும் மூலிகைப் பயிர்களை நாட்டி, அதனை பராமரித்து அதன் மூலம் கிடைக்கின்ற மூலப் பொருட்களை சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு வழங்கக்கூடியவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

     

    மூலிகைப் பயிர்களை செய்கை பண்ணக்கூடிய வகையில், நீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது.

     

    குறிப்பிட்ட மூலிகைத் தோட்டத்தில் 3 மாத காலப் பகுதியில் செய்கை பன்னக்கூடிய சிற்றரத்தைதிப்பிலிஇஞ்சிசுக்குஆடாதோடை,

    வெண்நொச்சி போன்ற இன்னும் பல மூலிகைத் தாவரங்களை செய்கை பன்னவேண்டும்.

     

    இந்த நடைமுறையை ஊவா மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மிக நீண்டகாலமாக கடைப்பிடித்து வருவதுடன், இதற்குத் தகுதியானவர்களுக்கு வழங்கி வருவதுடன், அவர்களினால் செய்கை பன்னுகின்ற மூலிகையின் பயன்பாட்டு மருத்துவப் பொருட்களை குறித்த திணைக்களம் கொள்வனவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

     

    இதுபோன்ற நடைமுறையை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன், இதில் ஆர்வமுள்ளவர்கள் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 026 - 222 5993, 026 - 222 5639, 026 - 222 5640 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூலிகைத் தோட்டச் செய்கைக்கு விண்ணப்பம் செய்யலாம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top