• Latest News

    January 15, 2025

    போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்தவர்களை விரட்டியடிக்க மக்கள் தயார்

     போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார். இனிவரும் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும். நாம் மீண்டெழுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்துவிட்டது, இனி அந்தக் கட்சிக்கு மீள் எழுச்சி இல்லை என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது.

    இறுதியாக நடைபெற்ற இரண்டு தேர்தல்களும் எமக்குத் தோல்விகளைத் தந்தாலும் நாம் அதனைப் படிக்கற்களாக மாற்றியுள்ளோம். இனிவரும் தேர்தல்கள் எமக்குச் சாதகமாகவே அமையும்.

    அதாவது அந்தத் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும். நாம் மீண்டெழுவோம். தேர்தலின் போது போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்தவர்களை விரட்டியடிக்க மக்கள் தயார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top