ஜெனீவா உடன்படிக்கைகளின் கீழ், "போர்க்குற்றங்களைச் செய்ததாகவோ அல்லது உத்தரவிட்டதாகவோ குற்றம் சாட்டப்பட்ட நபர்களைத் தேடி, அதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க அல்லது நாடு கடத்துவதற்கு, அமெரிக்காவிற்கு தலையாய கடமை உள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமெரிக்கா இருக்க கூடது எனவும் குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“நாங்கள் முன்னர் தெரிவித்தது போல, இஸ்ரேலிய பிரதமர் "மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் செய்தார்" என்று குற்றம் சாட்டி, கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.சி.சி கைது உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக அமெரிக்க ஆயுதங்கள் போர்க் குற்றங்களுக்கு பங்களித்ததற்கான ஆதாரங்களை குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் காசாவில் இனப்படு கொலை செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை அந்த உத்தரவு தொடர்பான அறிக்கையில் நிறுவப்பட்டுள்ளது” என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
மேலும், "காசாவில் இஸ்ரேலின் இனப்படு கொலைக்கும், இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறி முறையின் கீழ் பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஐ.சி.சி கைது உத்தரவுகளுக்கு இணங்குவதும் உள்நாட்டு நீதிமன்றங்களில் பொறுப்புக் கூறலைத் தொடர்வதும் மிக முக்கியமானது" என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment