• Latest News

    March 04, 2025

    மனைவியை தாக்கிய கணவனை கைது செய்ய நடவடிக்கை!


     பாறுக் ஷிஹான் -
    உல்லாசமாக இருந்த தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவில் இடம்பெற்றுள்ளது.

    அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வாசல் அருகில் உள்ள கடற்கரைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(2) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளார்.

    குறித்த முறைப்பாட்டிற்கமைய பெண்கள் சிறுவர் முறைப்பாட்டு பிரிவு பொலிஸ் குழுவினர் தேடுதல் மேற்கொண்டு தலைமைறைவாகியுள்ள குடும்பஸ்தரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் குறித்த சம்பவத்தில் சுமார் 38 வயதுடைய  நிந்தவூர் பகுதியை சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்  வழிகாட்டுதலில்     சந்தேக நபரை  கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனைவியை தாக்கிய கணவனை கைது செய்ய நடவடிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top