இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பலுசிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில்,
பலியானவர்களின் எண்ணிக்கை, 515 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த,
24ம் தேதி, 7.7 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. பலுசிஸ்தான்
மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தினால், ஆவாரன் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள்
மோசமாக பாதிக்கப்பட்டன. மலைபாங்கான பகுதிகள் என்பதால், நிவாரண பொருட்களை,
தரைவழியாக கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ராணுவ
ஹெலிகாப்டர்கள் மூலம், நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த
பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் சிலர், இரண்டு, ராணுவ ஹெலிகாப்டர்கள் மீது,
ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இருப்பினும், இதனால்
ஹெலிகாப்டர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.பூகம்ப பகுதிகளில் இதுவரை,
515 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும்,
பலுசிஸ்தான் தலைமை செயலர் பாபர் யாகூப் தெரிவித்து உள்ளார். பூகம்ப
பகுதிகளில், 1,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், மீட்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.September 28, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment