ஹிட்லரின் இறுதி நாட்களில் அவரது வாழ்க்கை குறித்த கடைசி சாட்சி, ரோக்கஸ் மிஸ்க் (Rochus Misch), அவரது 96வது வயதில் இறந்துவிட்டார். மிஸ்க், ஹிட்லரின் மெய்க்காப்பாளர்கள் பிரிவுகளில் ஒன்றில், சார்ஜெண்டாக இருந்தார். ஆனால் பெரும்பாலும் தொலைபேசி இணைப்பாளராகவே பணியாற்றினார்.
ஹிட்லரின் தலைமையகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய இவர், ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவரைப் பார்த்த கடைசி வெகு சிலரில் ஒருவர்.
அவர் இறக்கும் வரையிலும் கூட, ஹிட்லருக்கு விசுவாசமாகவே இருந்தார். ஹிட்லரை ஒரு அற்புதமான தலைவர் என்று அவர் கூறி வந்தார்.
2006ம் ஆண்டில் மிஸ்க் தனது ஹிட்லர் கால நினைவுகளைப் பற்றி எழுதிய புத்தகத்தை விமர்சகர்கள் புறந்தள்ளினார்கள். இந்தப் புத்தகத்தில் அவர், ஹிட்லரின் உதவியாளர்கள் குழுவின் தனது பங்கை மிகைப்படுத்தியிருக்கிறார் என்று விமர்சகர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment