• Latest News

    September 29, 2013

    நிந்தவூர் பிரதேச சாகித்திய விழா எப்போது நடைபெறும்; பொது மக்கள் கேள்வி

    நிந்தவூர்,
    அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் சாகித்திய விழா வருட வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு கலைஞர்களும், துறை ரீதியாக சாதனை படைத்தவர்களும், சமூக ஆர்வலர்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றார்கள். ஆனால், நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் இது வரைக்கும் எந்தவொரு சகித்திய விழாவும் நடைபெறவில்லை என நிந்தவூர் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
    நிந்தவூர் பிரதேசத்தில் கலைஞர்களும், சாதனையாளர்ளும், துறை ரீதியான நிபுணத்துவங்களைக் கொண்டவர்கள் பலர் இருந்தும் அவர்களை கௌரவிப்பதற்காக நிந்தவூர் பிரதேச செயலகம் இது வரைக்கும் சாகித்திய விழாவினை நடத்தாது இருப்பதற்கான காரணம் என்னவென்றும் நிந்தவூர் பிரதேச மக்கள் கேள்வி கேட்கின்றார்கள்.
    ஓவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் சாகித்திய விழாவினை நடத்துவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வருடா வருடம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு சாகித்திய விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தென்றும் நிந்தவூர் பிரதேச மக்கள் கேட்கின்றார்கள்.
    நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் சாகித்திய விழாவினை நடாத்துவதற்கு வருடா வருடம் கலந்துரையாடல்கள் நடைபெற்று, ஆலோசனைகளும் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் பெறப்பட்டு வந்துள்ளன. ஆனால், சாகித்திய விழா மட்டும் நடைபெறவில்லை.
    நிந்தவூர் பிரதேசத்தில் சாகித்திய விழா இது வரைக்கும் நடைபெறாமல் இருக்கின்ற நிலையில்,  அதற்காக ஒதுக்கப்பட்ட  நிதிகளுக்கு என்ன நடந்ததென்று நிந்தவூர் பிரதேச செயலகம் இது வரைக்கும் வெளிப்படுத்தவில்லை. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சாகித்திய விழா எப்போது நடைபெறும்; பொது மக்கள் கேள்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top