• Latest News

    September 28, 2013

    விக்னேஸ்வரனின் பயம்!

    வடமாகாணசபை நிர்­வா­கத்­துடன் இணைந்து செயற்­பட தயார் என்று தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் பஷில் கூறியிருந்தமையில் நம்பிக்கை உள்ளதாக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஆனால் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு பேச்சுக்களை பேசுகின்றார்கள். சில நேரங்களில் அவர்களின் கருத்­துக்­க­ளுக்கு ஜனாதிபதி செவி சாய்ப்பதால் ஏதாவதொன்றை கூறிவிட்டு மாறாக வேறு எதனையும் செய்யக்கூடும் என்றதொரு பயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
    கட்டாயமாக அவர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
    அத்­துடன் சிங்கள மக்­களை குழப்­பு­வ­தற்கு இனத்துவேஷத்துடன் செயல் படுவதற்கு சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் அவர் ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு தனது நிலைப்­பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்று தெரியாது. நாங்கள் இவற்றை அனு­ப­வத்தில் நன்­றாக படித்துள்ளோம்.
    உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை வைத்த போது எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்று நாம் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் 200 பௌத்த பிக்குகள் அவரது வீட்டிற்குச் சென்று பல எதிர்ப்பு வார்த்தைகளை கூறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டார்.
    டட்லி சேனாநாயக்கவுடனும் அவ்வாறு தான் இடம்பெற்றது. இப்படி ஒவ்வொரு சந்­தர்ப்­பத்­திலும் தலைவர்கள் சில நல்ல காரியங்கள் செய்யும் போது அதை முறி­ய­டிப்­ப­தற்­கான நடவடிக்கைகளே இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
    நன்றி: வீரகேசரி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விக்னேஸ்வரனின் பயம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top