‘மூன்றிலிரன்டு பங்கு இடத்தில் கூட்டமைப்பு வென்றிருப்பது, மக்களிடம் இருக்கும் செல்வாக்கைத்தானே காட்டுகிறது?
‘இல்லை. ஏற்கெனவே நான்கு திசைகளிலும் ராணுவத்தின் பிடி. இன்னொரு பக்கம் சிங்களக் குடியேற்றம், பாலியல் வன்கொடுமைகள் எனத் தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்கும் ஈழ மக்கள், தங்கள் பகுதிகளில் சிங்களத் தலைவர்கள் வென்றுவிடக் கூடாது என்பதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து இருக்கிறார்கள்.’
‘வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கப்பட்டபோது, வரதராஜப்பெருமாள்
அதன் முதல்வராக இருந்தார். அவர் ஒருமுறை ‘மாகாண சபையில் ஒரு நாற்காலி வாங்க
வேண்டும் என்றாலும் கொழும்புவுக்குச் சென்று சிங்களர்களின் ஒப்புதலைப் பெற
வேண்டியிருக்கிறது’ என்றார். இதுதான் மாகாண சபையின் அதிகாரம்’.
‘புலிகள் கட்டமைத்த தமிழீழம் கருத்தியல் ரீதியாக மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த வெற்றி தொடக்கப் புள்ளிதானே?’
‘கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி அங்கும் ஒரு முதல்வரை
நியமித்தார்களே… அதை ஏன் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளக் கூடாது. அது,
தமிழீழப் பகுதி இல்லையா? கிழக்கில் தேர்தல் முடிந்த பிறகுதான் மிகவேகமாக
அங்கு சிங்களர்களைக் குடியேற்றினர். இப்போது தமிழீழம் என்ற கோரிக்கையை
கைவிட்டுவிட்டதாகவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் சம்பந்தன்
உள்ளிட்டோர் சொல்கின்றனர். இவர்கள் சொல்வது முதல்புள்ளி அல்ல அதுதான்
இறுதிப் புள்ளி.’
‘தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லித்தானே வாக்குக் கேட்டது கூட்டமைப்பு?’
‘வெளிப்படையாக அப்படிச் சொல்லவே இல்லை. ‘தமிமீழக் கோரிக்கையை நாங்கள்
கைவிட்டு விட்டோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்’
என்று கூட்டமைப்பு சொல்லியிருந்தால், ஒரு தொகுதியில்கூட இவர்களால்
வென்றிருக்க முடியாது.’
‘தமிழர்களுக்கு என்று வலுவான அமைப்பு இல்லாத நிலையில், பேரினவாத அரசின் ஆட்சியில் வேறு என்னதான் பேச முடியும்?’
‘நாங்களும் பேரினவாத ஆட்சியின் கீழ்தான் அப்போது அரசியல் செய்தோம். ஒரு
சிங்கள எழுத்துக்களைக்கூட எங்கள் பகுதிகளில் அனுமதிக்கவில்லை. இப்போது,
சிங்களச் சட்டங்களை ஏற்று போராடப் போவதாக கூட்டமைப்பு சொல்கிறது. ஒரு
உண்ணாவிரதத்தையாவது இந்தக் கூட்டமைப்பு தமிழ்ப் பகுதியில்
நடத்தியிருக்கிறதா?’
‘இலங்கை ஆட்சியாளர்களுடன் நட்பாகப் பேசி மக்களுக்கு சில உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கலாம் என்று விக்னேஸ்வரன் சொல்கிறாரே?’
‘ஆரம்ப காலத்தில் எங்களோடு போராடிய என் அருமை நண்பர் மாவை சேனாதிராஜா, நாங்கள் எப்படி அரசியல் செய்தோம், எப்படி எல்லாம் போராடினோம், சிங்களர்களோடு சமரசமாகப் போனவர்கள் வரலாற்றில் என்ன ஆனார்கள் என்பதை எல்லாம் விக்னேஸ்வரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
‘இலங்கை ஆட்சியாளர்களுடன் நட்பாகப் பேசி மக்களுக்கு சில உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கலாம் என்று விக்னேஸ்வரன் சொல்கிறாரே?’
‘ஆரம்ப காலத்தில் எங்களோடு போராடிய என் அருமை நண்பர் மாவை சேனாதிராஜா, நாங்கள் எப்படி அரசியல் செய்தோம், எப்படி எல்லாம் போராடினோம், சிங்களர்களோடு சமரசமாகப் போனவர்கள் வரலாற்றில் என்ன ஆனார்கள் என்பதை எல்லாம் விக்னேஸ்வரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
சர்வதேசத்தை ஏமாற்ற மட்டுமே விக்னேஸ்வரனை ராஜபக்ஷே பயன்படுத்துவாரே தவிர,
தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிக் கொடுக்கப்போவது இல்லை.
இதெல்லாம் விக்னேஸ்வரனுக்குத் தெரியாது. ஏனென்றால், அவருக்கும் தமிழ்
அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
0 comments:
Post a Comment