இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது
நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள்
தொடர்பான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைக்கப் போவதில்லை என்று
இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த
உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது பாரதூரமான மனித உரிமை
மீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை
நடத்துவதற்கு எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அக்கறை
காட்டாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநா மனித
உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் தனது சொந்த விசாரணைகள் சுயாதீனமாக நடப்பதாக கூறிவருகிறது.
இலங்கை மீதுள்ள மனித உரிமை மீறல்
குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையென்று
சுட்டிக்காட்டி, இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை அரசு
தலைவர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் சர்வதேச மட்டத்தில்
பலமாக ஒலிக்கின்றமை குறிப்பிட
0 comments:
Post a Comment