• Latest News

    October 22, 2013

    சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு

    ஏ.எல்.ஏ.றபீக்பிர்தௌஸ்; சம்மாந்துறைப் பிரதேச எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி குளம் அபிவிருத்தியும், அப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
    பிரதேச செயலாளர் எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
    மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.பைசால்
    காசீம், மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.லலித் குமார , சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க, நீர்பாசன திணைக்கள உயரதிகாரிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், விவசாய வல்லுனர்கள் எனப் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
    சுமார் நான்கு மணித்தியாலங்கள் இடம் பெற்ற இம்மாநாட்டின் இறுதியில் பின்வரும் தீர்மானம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
    ' வளத்தாப்பிட்டி குளத்தை புனருத்தாபனம் செய்ய முன்வந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும். இதே வேளை இக்குளம் ஏழு அடியாகப் புனருத்தானம் செய்யப்பட்டால் இப்பிரதேசத்திலுள்ள  622 ஏக்கர் நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப் போதுமானதாகும். இக்குளத்தை 10 அடியாக விரிவாக்கம் செய்வதால் விவசாயிகளின் நெற்செய்கைப்பூமி 106 ஏக்கர் பறிபோகும் அபாயம் உள்ளது. இதனால் வேறு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே இவ்விடயத்தை உரிய அதிகாரிகளுக்கு எத்தி வைப்பதன் மூலம் வளத்தாப்பிட்டி குளத்தை 7 அடியாக அபிவிருத்தி செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top