முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் தீர்மானத்தின் படி கல்முனை மாநகர மேயர் பதவியை பொறுப்பேற்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என கல்முனை மாநகர பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்
எதிர்வரும் நவம்பர் மாதம் கல்முனை மாநகர அமர்வுகள் எனது தலைமையில் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறும் என்றும் நம்புகிறேன். கல்முனை மாநகர மேயராக பதவி வகித்த சிராஸ் மீராசாஹிப் தனது பதவியிருந்து ராஜினாமா செய்வாரெனவும் எதிர்பார்க்கிறோம். அவர் மேர் பதவியை பொறுப்பு எடுக்குமுன்னரே அதாவது 2 வருடங்களுக்கு முன தான் 2 வருடங்கள்தான் மேயர் பதவியிலிருப்பேன் என வாக்குறுதி வழங்கியுள்ளார். இன்று செவ்வாய்கிழமை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடமும் அவ்வாறே கூறியுள்ளார்.
இந்நிலையில் எந்தவித சிக்கலுமின்றி ஊர் பிரதேச பாகுபாடின்றி சுமூகமாக எனக்கு கல்முனை மேயர் பதவி கிட்டுமென எதிர்பார்க்கிறேன். அதற்காக நான் காத்திருக்கிறேன். என்றார்
இதே வேளை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபு இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர மேயர் பதவியில் நான் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதை மக்களளே தீர்மானிக்க வேண்டுமென கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீறாசாஹிப் தெரிவித்துள்ளார்.மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலகள் வெளியான நிலையிலேயே அவர் மேற்படி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாநகர சபைத் தேர்தலில் மக்கள் எனக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி கல்முனை மாநகரத்தின் முதல்வராக்கி அழகுபார்த்தனர். நான் மேயராக பதவி வகித்த காலத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எனக்கு வாக்களித்த மக்கள் குறிப்பாக சாய்ந்தமருது மக்களின் விருப்பத்தை நான் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களின் விருப்பு வாக்குகளே என்னை மேயர் பதவிக்கு கொண்டுசென்றது.
இந்நிலையில் நாளை புதன்கிழமை நான் ஊருக்குச் செல்கிறேன். அங்கு எனது மக்களுடன் கலந்துரையாடுவேன். எனது மக்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படி எனது தீர்மானத்தை மேற்கொள்வேன். இந்த மேயர் பதவி எனக்கு கிடைத்த கௌரவமாக நான் கருதியதில்லை. இந்தப் பதவி சாய்ந்தமருது மக்களுக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபை தேர்தல் 2011ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதனையடுத்து மேயரை நியமிப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற சிராஸ் மீராசாஹிப் முதல் இரண்டு வருடங்கள் கல்முனை மேயராகவும் இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இறுதி இரண்டு வருடங்கள் மேயராகவும் செயற்படுவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில் சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயராக நியமிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment