டைட்டானிக் கப்பலில் இசைத்த வயலின் 1.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது. கடந்த 1912 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து நிவ்யோர்க் நோக்கி தனது முதல் பயணத்தை ஆரம்பித்த டைட்டானிக் கப்பல் அட்லான்டிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பனிப்பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 1500 பேர் இறந்தனர்.
இந்த கப்பலில் இசைத்த இசைக்குழுவினர் வயலின் அண்மையில் லண்டனில் உள்ள ஹென்ரி ஆல்ரிட்ஸ் ஏல நிறுவனத்தினால் ஏலம் விடப்பட்டது.
ஏலத்தின் போது 9 கோடி ரூபாய் கொடுத்து கோடீஸ்வரர் ஒருவர் ஏலம் எடுத்தார்.டைட்டானிக் கப்பலில் இசைத்த இசைக்குழுவின் தலைவரான வாலஸ் ஹார்ட்லிக்கு சொந்தமான இந்த வயலினை அவரது காதலி மரியாஇ திருமண நிச்சயத்தின் போது பரிசாக வழங்கியுள்ளார். ஜெர்மனி தயாரிக்கப்பட்ட இந்த வயலின் கடந்த 2006 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுஇ ஏல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
யாரால் ஏல நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சேதங்களின்றி உருக்குலையாமல் இருக்கும் இந்த வயலின் நன்கு இசைக்கும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment