• Latest News

    October 21, 2013

    இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

    ஹோமாகம பிட்டிப்பன பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா ஆகியவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இன்று (21) திங்கட்கிழமை திறந்து வைத்தார்.
    இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனமும்-தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து இப்பாரிய திட்டத்தை முன்னெடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
    உலக சந்தைத் தரத்திற்கு ஏற்ப புதிய இயற்கை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளை விஸ்தரித்தல், உள்நாட்டு சர்வதேச பிரச்சினையான விவசாயம், உடல்நலம், சுகாதாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் தீர்வுகாணல், புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல் ஆகியனவே நனோ தொழில்நுட்ப சிறப்பு மையத்தின் நோக்கமாகும்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top