இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலை வர்கள் மாநாட்டை புறக்கணித்தால்,
அது பொதுநலவாய மாநாட்டுக்கு இழைக்கும் பாரிய துரோகமென, பிரிட்டிஷ்
வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள் ளார். வெஸ்ட் மினிஸ்டர்
பாராளுமன்றில் உரையாற்றிய வெளியுறவு செயாளர் வில்லியம் ஹேக்,
மாநாட்டை புறக்கணிப்பதை விடுத்து, அதில் கலந்து கொள்வதன் மூலம்,
இலங்கையில் மனித உரிமைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேரில் கண்டறிய
வாய்ப்பு கிட்டுமென, தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதனால், மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென,
பிரிட்டனின் நிழல் வெளியுறவு செயலாளர் டக்ளஸ் எலெக்சாண்டர் தெரிவித்த
கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே, வெளியுறவு செயலாளர் இதனை
தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகம், ஏனைய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் உட்பட பல்வேறு
விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்
கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததென, பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர்
வில்லியம் ஹேக் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment