• Latest News

    October 31, 2013

    மேயரின் கூட்டத்தில் பள்ளிவாசல் தலைவருக்கும், உலமாக்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லையாம்?

    சாய்ந்தமருது;
    கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைக் கருத்திற் கொண்டு நேற்று இரவு (30.10.2013) சாய்ந்தமருதில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சாய்ந்தமருது ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபாவுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என சாய்ந்தமருது ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சாய்ந்தமருது ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஹனீபா பேச முற்பட்ட போது மேயர் சிராஸின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு சப்தமிட்டுக் கொண்டதோடு, பள்ளிவாசல் தலைவரும், மரைக்கார் சபையும் மேயர் பதவியை எடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காது போனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்று சப்தமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
    இதனால், சாய்ந்தமருது ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஹனீபா பேசாது அமர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அவரை அழைத்து அவமானப்படுத்தி விட்டுள்ளார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இதே வேளை, பௌத்த தேரருக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அங்கு இருந்த உலமாக்கள் ஒருவருக்கும் பேசுவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படாதிருந்தமை ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
    ஏதற்காக சாய்ந்தமருது சாய்ந்தமருது ஜூம்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருக்கும், உலமாக்களுக்கும் கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை பற்றி சாய்ந்தமருது மக்கள் பலரும் கேட்கின்றார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மேயரின் கூட்டத்தில் பள்ளிவாசல் தலைவருக்கும், உலமாக்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லையாம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top