• Latest News

    October 24, 2013

    மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த துறவிக்கு கடூழிய சிறைத் தண்டனை

    பாடசாலை மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அனுராதபுரத்தைச் சேர்ந்த 60 வயதான பௌத்த துறவிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    கெபிதிகொல்லாவ பகுதியிலுள்ள துறவிக்கு எதிராக சட்டமாஅதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தபோதே, வடமத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
    இதற்கமைய, குற்றவாளிக்கு 02 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதவான், தீர்ப்பை பத்தாண்டுகள் ஒத்திவைத்தார்.
    இதனைத்தவிர பாதிக்கப்பட்ட மாணவருக்கு 75 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    2011 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி வாகல்கட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பௌத்த துறவி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த துறவிக்கு கடூழிய சிறைத் தண்டனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top