சூரியனுக்கு வெகு அருகே வந்துகொண்டிருக்கும் ஒரு எரி
நட்சத்திரம் தப்பிப் பிழைக்குமா என்பதைப் பார்க்க விண்ணியலாளர்கள்
உலகெங்கும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஐசோன் என்ற இந்த எரிநட்சத்திரம், சூரியனுக்கு மிக அருகில் வியாழனன்று வரும்.
சூரியக் குடும்பத்தின் வெளி எல்லையிலிருந்து சுமார் 55 லட்சம் ஆண்டுகள் பயணித்து இந்த எரிநட்சத்திரம் சூரியனை நெருங்கியிருக்கிறது.
சூரியனை நெருங்கும் இந்த எரிநட்சத்திரம் ,
சூரியனின் ஈர்ப்பு சக்தி மற்றும் வெப்பத்தால் அழிக்கப்படாவிட்டால், அடுத்த
ஓரிரு வாரங்களில் இரவு வானில் கண்ணுக்கு தெரியலாம்.
இது மட்டும் தப்பிப்பிழைத்தால், இதுதான் "இந்த நூற்றாண்டின் எரிநட்சத்திரமாக" விளங்கும் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறார்கள்
BBC-
0 comments:
Post a Comment