• Latest News

    November 28, 2013

    பேலியகொடை நகர சபை தவிசாளரின் பொறுப்புக்கள் உப தவிசாளரிடம் கையளிப்பு

    பேலியகொடை நகர சபை தவிசாளரின் பொறுப்புக்களை, அதன் உப தவிசாளரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

    நகர சபைக்கு புதிய தவிசாளர் நியமிக்கப்படும் வரையில், உப தலைவர் கடமைகளை முன்னெடுப்பார் என அவர் தெரிவித்தார்.

    இரண்டாவது முறையாகவும் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய தவிசாளர் நீக்கப்பட்டுள்ளதாக கருதி நடவடிக்கை எடுப்பதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
    உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலத்தின் புதிய கோட்பாடுகளுக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இதற்கமைய, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் பேலியகொடை நகர சபையின் தவிசாளர் பதவிக்கு வெற்றிடம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரினால் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் நியமிக்கப்படுவார் என மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பேலியகொடை நகர சபை தவிசாளரின் பொறுப்புக்கள் உப தவிசாளரிடம் கையளிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top