தெற்காசிய நாடுகளில் பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை கண்காணிக்கும் தலைமை நிலையம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. என்று தகவல்கள் குறிப்பிடுகிறது
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை
பொலிஸ் திணைக்களத்தில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
தலைமையகம் தெரிவித்துள்ளது .
அதேவேளை ஆட்பதிவுத் திணைக்களத்தில் பதிவு
செய்யப்படும் சகல இலங்கை பிரஜைகளின் தகவல்களையும் பாகிஸ்தான்
பெற்றுக்கொள்ளக் கூடிய விலை மனுகோரல் ஒன்றுக்கு ஜனாதிபதி அனுமதி
வழங்கியுள்ளார். என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன .
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அனுமதியை கடந்த 14 ஆம் திகதி
வழங்கியுள்ளார். என்று தெரிவிக்கப் படுகிறது
பதிவுசெய்யப்பட்ட நபர்களின் தகவல்களை
கணனிமயப்படுத்தல் மற்றும் திரட்டப்பட்ட விபரங்களை வழங்குவது தொடர்பான சேவை
என்ற பெயரிலான 18-2013 என்ற இலக்கத்தை கொண்ட அமைச்சரவை யோசனைக்கே இந்த
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment