எகிப்து நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வாதிகாரியாக விளங்கிய ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி முகமது மோர்சி ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது அங்கு ஜனநாயகம் தழைத்து மக்கள் பொருளாதார செழிப்பினை அனுபவிப்பார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.
அதற்குப் பதிலாக இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியைப் பின்னணியாகக் கொண்டு மோர்சி ஆட்சி நடத்த முற்பட்டது அவரது வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று.
இதனால் பதவியேற்ற ஒரு வருடத்திலேயே இந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி எகிப்து ராணுவத்தினரால் மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட்டார்.அதற்குப் பதிலாக இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியைப் பின்னணியாகக் கொண்டு மோர்சி ஆட்சி நடத்த முற்பட்டது அவரது வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று.
அதன்பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் ராணுவ ஆதரவு அரசாங்கத்திற்கிடையில் ஏற்பட்டுள்ள அதிகார போராட்டம் இன்னும் நிச்சயமற்ற நிலையிலேயே நாட்டைத் தள்ளியுள்ளது. முகமது மோர்சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய இயக்கத்தின் பல தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியின் மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை தன்னுடைய அளவில்லா அதிகாரத்தைப் பயன்படுத்தி மோர்சி சுட்டுத் தள்ள உத்தரவிட்டார். இதனால் பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் இறக்க நேரிட்டது.
இந்த குற்றச்சாட்டினை மையமாக வைத்து மோர்சியிடம் இன்று விசாரணை தொடங்கியது. இதற்காக கெய்ரோ போலீஸ் அகாடமியில் நடைபெறும் விசாரணைக்கு முகமது மோர்சி ஹெலிகாப்டரில் அழைத்துவரப்பட்டதாக மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே அகாடமியில்தான் ஹோஸ்னி முபாரக்கும் விசாரிக்கப்பட்டார். பொதுமக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியதாக மோர்சி மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவை நிரூபிக்கப்பட்டால் முகமது மோர்சியும்இ அவருக்கு ஆதரவாளர்களென கைது செய்யப்பட்டுள்ள 14 இஸ்லாமியக் கட்சி உறுப்பினர்களும் மரண தண்டனையையோ அல்லது ஆயுள் தண்டனையையோ பெற நேரிடும்.

0 comments:
Post a Comment