• Latest News

    November 28, 2013

    பாகிஸ்தான் - இலங்கை இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம்!

    இலங்கை – பாகிஸ்தான் இணைந்த பொருளாதார ஆணைக்குழுவின் 11வது அமர்வு நேற்று புதன்கிழமை (27)  கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.

    இலங்கை சார்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனும் பாகிஸ்தான் சார்பில் கைத்தொழில் மற்றும் உற்பத்தி சமஷ்டி அமைச்சர் குலாம் முர்தஷா ஜதொய்யும் இந்த அமர்வில் பிரதிநிதித்துவம் செய்தனர்.

    றிஷாட் பதியுதீன் தனது உரையில் இலங்கையும் பாகிஸ்தானும் மிகவும் நெருங்கிய  உறவை வைத்துக்கொள்வதாகவும் பாகிஸ்தான் இலங்கைக்கு மிகவும் அண்மையாகவும் ஒரு உண்மையான சிநேகிதனாகவும்  விளங்குகிறதெனவும் கூறினார்.
    மேலும் அவர் கூறுகையில் இரு நாடுகளும் இருதரப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் சம்பந்தமாக பொதுவான கருத்துக்களை பங்கிடுதல் ஆகியவற்றில் ஆழ வேரூன்றி  உள்ளனவெனவும் சுட்டிக்காட்டினார்.

    மிகவும் கஷ்டமான மற்றும் தேவையான காலங்களில் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டனவெனவும் மேலும் கூறினார்.

    பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாகிஸ்தான் வழங்கும் இந்த பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் மற்றும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாகிஸ்தான் - இலங்கை இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top