தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பேரின வாத பெரும்பான்மைச் சமுகம் அடக்கி ஒடுக்கி வாழும் இன்றைய சூழலில் தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் பேசும் இலங்கை மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளை அறிந்து ஆராய்ந்து தீர்வு காணவேண்டிய தேவையும். அவசியமும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு 'ஐக்கிய தமிழ் முஸ்லிம் கூட்டமைப் பு' என்ற தலைப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம்
பற்றிய புதியதோர் அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கும் பயணம் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஒன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் உணவகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் முகாமைத்தவப்பணிப்பாளர் ஜனாப் அன்வர் முஸ்தபா தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா கலந்த கொண்டார்.
மேலும் தென்கிழக்குப் பல்கலைக்கழ விரிவரையாளர் கலாநிதி அஷ;Nஷய்க் எம்.எஸ்.எம். ஜலால்தீன்; உள்ளீட்ட பல்கலைக்கழ விரிவுரையாளர்கள், உலமாக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றம் ஊர்பிரமுகர்களும் கலந்தது கொண்டனர்.
இங்கு பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா பின்வருமாறு உரையாற்றினார்.
இளைஞர்கள் ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்தாகும். இவர்கள் தங்கள் எதிர்காலத்தையும். தங்கள் சமுகத்தின் எதிர்காலத்தையும,; தான் வாழம் நாட்டின் எதிர்காலத்தையும் சிந்தித்துச் செயற்ப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முரன்பாட்டில் உடன்பாடு காணவேண்டும் என்பதை தமிழ் முஸ்லிம் சமுகம் உணர்ந்த செயற்பட வேண்டிய தேவை இருக் கின்றது.
முஸ்லிம் சமுகத்தில் முன்பு இருந்த எழுச்சி இப்போது இல்லை அரசியலுக்காக எதையும் செய்யும் மனநிலைக்கு முஸ்லிம் அரசியல்தலைமைகள் மாறிவிட்டன இடிக்கிறது பள்ளிவாசலாக இருந்தாலும் கிடைக்கிறது பெரிய கெபினட்டாக இருக்கட்டும் என்று தான் இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் நினைக்கிறார்கள்.
அரசியலை ஒருபக்கம் வைத்து விட்டு புத்திஜீவிகளும் இளைஞர்களும் நமது சமுகத்திற்கு என்ன வேண்டும் என்பதை ஆராய்ந்து தேவையானதைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும.
ஊடகங்களும் அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட புத்தி ஜீவிகளுக்கும் இளைஞர் சமுகத்திற்கும் மன்னுரிமை கொடுக்க முன்வர வெண்டும்.என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்த நிகழ்வில்; எதிhகால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 25 பேர் அடங்கிய உறுப்பினர் குளுவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment