கல்முனை பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவின் மருதமுனை-நற்பிட்டிமுனை வலய சமுர்த்தி; வங்கி ஏற்பாடு செய்த நற்பிட்டிமுனை 3ம் பிரிவுக்கான 'திவிநெகும'அபிவிருத்தித் திணைக்களம் தாபிப்பதற்கு முன்னரான சமுர்த்தி வங்கிகளின் சிறு குழுக்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புக்களுக்கான விழிப்பூட்டல் வேலைத் திட்டம் இன்று (29-11-2013) நற்பிட்டிமுனையில் நடைபெற்றது. இதில் கல்முனை பிரதேச செயலக
சமுர்த்திப் பிரிவின் தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ், கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.சி.அன்வர், மருதமுனை-நற்பிட்டிமுனை வலய சமுர்த்தி; வங்கி முகாமையாளர் எம்.எம.;முபீன் ஆகியோர் வளவாளர்களாகக்கலந்து சமுர்த்தி பயனாளிகளுக்கு விளக்க உரை நிகழ்திதினார்கள். நற்பிட்டிமுனை 3ம் பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரோஸ்னி தௌபீக், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என்.எம் நௌசாத், எம்.ஜெமீல். எம்.எல்.நாஸர், ஐ.கலீல் எம்.எம்.தௌபீக் ஆகியோருடன் 170 சமுர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment