• Latest News

    November 29, 2013

    மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி மீது குற்றப் பத்திரிகை : நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் செல்ல அனுமதி

    மட்டு.பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்கு சேதம் விளைவித்ததுடன் பிரதேச செயலாளரை தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டி தாக்க முனைந்ததாக சந்தேகம் தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
     
    கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
     
    இது தொடர்பான குற்றப் பத்திரத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதுடன் குறித்த தேரரும் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை விசாரணை செய்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி றியாழ் குறித்த தேரரை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
     
    இதேவேளை பட்டிப்பளை பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களில் பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    - See more at: http://metronews.lk/article.php?category=news&news=3149#sthash.7SOgKCvx.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி மீது குற்றப் பத்திரிகை : நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் செல்ல அனுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top