கல்முனை வலயத்தில் மிக நீண்ட நாளாக ஆசிரியர் மத்திய நிலையமொன்றுக்கான நிரந்தரக் கட்டிடம் இல்லாதிருந்துள்ளது. அந்தக் குறைபாடு இன்றுடன் முடிவுக்கு வரும் வகையில் இன்று சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் மத்திய நிலைய இன்று திறந்து வைக்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கௌரவ அதிதியாகவும்
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் விசேட அதிதியாகவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கௌரவ அதிதியாகவும்
கல்முனை வலய பணிமனையின் பிரதி கல்விப்பணிப்பாளர்கள், கணக்காளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலைய உத்தியோஸ்தர்கள் மற்றும் பலர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment