• Latest News

    November 27, 2013

    காத்தான்குடியில் சூறாவளி!

    காத்தான்குடியில் இன்று புதன்கிழமை அதிகாலை சூறாவளி மற்றும்கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்ததுடன் ஐந்து மீன்பிடி படகுகளும் முழுமையாக சேதடைந்துள்ளன.
    காத்தான்குடியில் இன்று அதிகாலை வீசிய சூறாவளியினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மீன் பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்து அப்படகுகளின் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன.
     
    கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து கரைக்கு வந்த பாரிய கடல் அலைகள் இந்த படகுகளை சேதப்படுத்தியதுடன் குறித்த சம்பவத்தின் போது மீனவர் ஒருவரும் படுகாமடைந்துள்ளார்.

    இதில் காயமடைந்த மீனவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    சுமார் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி படகுகளும் இயந்திரங்களும் சேதடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    சேத விபரங்களை காத்தான்குடி பொலிசார் மற்றும் மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடியில் சூறாவளி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top