மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா விசாரிக்கத் தவறினால் அனைத்துலக விசாரணை நடத்தப்படும் என்று எச்சரித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனைக் கண்டித்து, கொழும்பில் நேற்றைய தினம் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று மதியம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பின்னர் முஸ்லிம்கள் கமரூனுக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய சுலோக அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களின் கீழ் செயற்படுவதாக, டேவிட் கமரூன் மீது அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
நேற்று முன்தினம் ராவண பலய என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத ,அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும், கொழும்பில் டேவிட் கமரொனுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பிரித்தானிய பிரதம மந்திரி கெமருனுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு சிலரே கலந்து கொண்டதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment