• Latest News

    December 29, 2013

    வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு

    வீடொன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகள் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவமொன்று பட்டபொல,  கிரிமெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

    பெற்றோர் அற்ற நிலையில் குறித்த சிறுமிகள் மூவரும் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இச்சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    7 வயது, 5 வயது மற்றும் ஒன்றரை வயதுடைய மூன்று சிறுசமிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இவர்களது பெற்றோர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

    இதேவேளை, சுமார் ஒரு நாள் தனிமையில் இருந்த இச்சிறுமியரை காலி, கிதுலம்பிட்டிய சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்குமாறு பலபிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீடொன்றில் அடைக்கப்பட்ட 3 சிறுமியர் மீட்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top