கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தினை எதிர்வரும் 31ம் திகதி வெற்றிபெற சகல முயற்சிகளையும் எடுத்து வருகின்றேன் என திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
கடந்தவாரம் கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டு வரவு-செலவு திட்டம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இம்முரண்பாடுகளுள் தொடர்புடைய நான்கு உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்களின் முரண்பாடுகளுக்கான காரணங்களை கேட்டறிய நேற்றைய தினம் (2013.12.28) சந்தித்து கலந்துரையாடியபோது மூன்று உறுப்பினர்களும் புதிய முதல்வர் பதவியேற்ற போது மாநகர நிருவாகத்தினரால் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் சம்பந்தமாக எடுத்துக் கூறினார்கள்.
குறித்த உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் சம்பந்தமாக கட்சிக்குள் இருந்து கொண்டு தீர்த்துக் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாவும் உறுதியளிக்கப்பட்டது.
பிரதி முதல்வர் சிறாஸ் மீராசாஹிப் கொழும்பில் இருந்ததினால் அவருடன் மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஒற்றுமை தொடர்பாக தொலைபேசி ஊடாக தெளிவாக பேசப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடல் மூலமாக ஆதங்கங்களை முழுமையாக தீர்த்து வைப்பதற்காக நாளை (2013.12.30) திங்கட்கிழமை நீதியமைச்சரும், தேசிய தலைவருமான கௌரவ ரஊப் ஹக்கீம் தலைமையில் கல்முனை மாநகர சபையின் சகல முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்து உறுப்பினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தினை எதிர்வரும் 31ம் திகதி வெற்றிபெற சகல முயற்சிகளையும் எடுத்து வருகின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
0 comments:
Post a Comment