பி.எம்.எம்.ஏ.காதர்;
மருதமுனை பிரதேச தகவல்களை எதிர்கால சந்ததிகள் அறியும் வகையில் மருதமுனை எம்.சி.எம். முகம்மட் அப்துல் காதீர் வெளியீட்வரும் 'அல்-மருதமுனை' சஞ்சிகையின் 11வது இதழ் மர்ஹூம் எஸ்.எச்.எம்.அக்பர் அதிபரின் நினைவு மலராக நாளை (29-12-2013) காலை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் வெளியிடப்படவுள்ளது.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அதிபர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் கலந்து கொள்கின்றார். விஷேட அதிதியாக ஒய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச். காதர் இப்றாகீம் கலந்து கொள்கின்றார்.
மேலும் கௌரவ அதிதியாக ஜெனிவா யு.என்.எச்.சி.ஆர். தலைமையக சிரேஷ்ட நிதி திட்டமிடல் அதிகாரி எம்.ஐ.எம். சுபைர் கலந்து கொள்கின்றார். மேலும் கவிஞர்; விஜிலியின் வரவேற்புரையும், ஏ.ஆர். எம் உவைஸ் ஆசிரியர், ஒய்வ பெற்ற அதிபர் ஏ.எல் மீராமுகைதீன் ,சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோரின் விஷேட உரைகளும் இடம் பெறவுள்ளன.
0 comments:
Post a Comment